Advertisement

நீதிமன்றத்தில் கையெழுத்திடச் சென்ற 2 ரவுடிகள் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை

தூத்துக்குடி அருகே ஜாமீனில் வெளிவந்து நீதிமன்றத்தில் கையெழுத்திட காரில் சென்ற ரவுடிகள் இருவரை ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்த கொலையாளிகளை போலீசார் தேடிவருகின்றனர்.

தூத்துக்குடியை அடுத்த புதூர்பாண்டியாபுரத்தை சேர்ந்த ஊராட்சி முன்னாள் தலைவரான முனியசாமி, அவரது நண்பர் முத்துசாமி ஆகியோர் கடந்த ஜனவரி மாதம் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.

கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், கொடிகாட்டு ராஜா, கணேசன் உள்ளிட்ட 6 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த 6 பேரும், தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட இன்று காலை காரில் சென்று கொண்டிருந்தனர். புதூர் பாண்டியபுரம் அருகே வந்தபோது காரை பின் தொடர்ந்த லாரி ஒன்று காரின் மீது மோதியது.

இதனால் அதிர்ச்சியடைந்த கொடிகாட்டு ராஜா, கணேசன் உள்ளிட்டோர் காரில் இருந்து இறங்கி ஓடினர். அவர்களை விடாமல் துரத்திய கொலைக்கும்பல் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியது. அரிவாளல் வெட்டில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கொலை சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார், கொலை செய்யப்பட்டவர்களின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும் கொலைக்கான காரணம் குறித்தும் கொலையாளிகள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன