Advertisement

நீதித்துறையின் உள்விவகாரத்தை அரசியலாக்க முயற்சிக்கிறார் ராகுல்காந்தி – பாஜக குற்றச்சாட்டு

உச்சநீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகள் தலைமை நீதிபதிக்கு எதிராக போர்க்கொடி எழுப்பிய விவகாரத்தில் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். நீதிபதிகள் நால்வர் செய்தியாளர்களை சந்தித்ததைத் தொடர்ந்து ராகுல் காந்தி இல்லத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர் திரண்டனர். அவர்களுடன் ஆலோசனை நடத்திய ராகுல்காந்தி,பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது, விசாரணைக்கு உத்தரவிட மத்திய அரசுக்கு வலியுறுத்தினார்.

நீதியை விரும்பும் அனைத்து குடிமக்களும் இப்பிரச்சினையை உரிய முறையில் அணுக வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக ராகுல்காந்தி கூறினார். ராகுலின் கருத்தையடுத்து இந்திய ஜனநாயகத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. என்று காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வமான டிவிட்டர் பக்கத்திலும் பதிவு வெளியாகியுள்ளது.

இதனிடையே ராகுல்காந்தியின் கருத்துகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக, நீதிபதிகளின் உள் விவகாரத்தை அரசியலாக்க முயற்சிப்பதாக ராகுல்காந்தி மீது குற்றச்சாட்டியுள்ளது. இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பாத்ரா, ராகுல்காந்தி நீதித்துறையின் உள் விவகாரத்தை அரசியலாக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன