Advertisement

மனைவியை கழுத்தறுத்து கொன்ற கணவன் – அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் சாலையின் நடுவே மனைவியை கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் பெரம்பூரைச் சேர்ந்த மெக்கானிக்கான தர்மராஜ், தனது முதல் மனைவியை பிரிந்து வாழ்ந்த நிலையில், பூவனூரைச் சேர்ந்த சுமதி என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். மதுப்பழக்கத்திற்கு அடிமையான தர்மராஜ், சுமதியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இருவரும் இன்று காலையில் நீடாமங்கலத்தில் பொருட்கள் வாங்குவதற்காக சென்றனர்.

அப்போது சாலையிலேயே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அண்ணாசிலை அருகே வந்த போது தனது கையிலிருந்து கத்தியை எடுத்த தர்மராஜ் மனைவி சுமதியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தர்மராஜைப் பிடித்து கட்டி வைத்தனர். தகவல் அறிந்து வந்த போலீஸார் தர்மராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன