Advertisement

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்கு: நீதிமன்றத்தில் அபராதம் செலுத்த கடன்தான் வாங்க வேண்டும் – மதுகோடா

நீதிமன்றம் விதித்த அபராதத்தை செலுத்த, யாரிடமாவது கடன் வாங்கத்தான் வேண்டும் என்று நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற முன்னாள் அமைச்சர் மதுகோடா தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் இவர் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேட்டில் ஈடுபட்டதாக சிபிஐ தொடர்ந்த வழக்கில், டெல்லி சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்றம் சனிக்கிழமையன்று தீர்ப்பளித்தது. இதன்படி மதுகோடாவுக்கு 3 ஆண்டுகள் சிறையும், 25 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இதையடுத்து, தீர்ப்பு குறித்து வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து, டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுக உள்ளதாக மதுகோடா கூறியுள்ளார். தனது வங்கிக் கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட்டிருப்பதால், நீதிமன்றம் விதித்த அபராதத்தை செலுத்த யாரிடமாவது கடன் பெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன