Advertisement
Advertisement

நிர்மல் கிருஷ்ணா நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர் மன அழுத்தத்தால் உயிரிழப்பு, உறவினர்கள், முதலீட்டாளர்கள் சாலை மறியல்

கன்னியாகுமரியில் நிர்மல் கிருஷ்ணா நிதி நிறுவனம் மோசடி செய்ததால், மாரடைப்பு ஏற்பட்டு முதலீட்டாளர் ஒருவர் உயிரிழந்ததாகக் கூறி, அவரது உடலுடன் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கேரள-தமிழக எல்லையான மத்தம்பாலை பகுதியில் செயல்பட்ட நிர்மல் கிருஷ்ணா சிட் ஃபண்ட்ஸ் என்ற நிதி நிறுவனத்தில், தமிழகம் மற்றும் கேரளாவைச் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் 2 ஆயிரம் கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளனர். முதிர்வு காலம் முடிந்தும் முதலீட்டாளர்களுக்கு நிர்மல் கிருஷ்ணா நிதிநிறுவனம், பணத்தை தராமல் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

இதையடுத்து, தலைமறைவான உரிமையாளர் நிர்மலன், கடந்த வெள்ளிக்கிழமை சரணடைந்தார். இந்நிலையில், நிர்மல் கிருஷ்ணா நிதி நிறுவனத்தில் 40 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்த மதுசூதனன் என்பவர் மன அழுத்தத்தால், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனால், அவரது உடலுடன், பரசுவிக்கல் என்ற இடத்தில் நாகர்கோவில் – திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் உறவினர்களும், முதலீட்டாளர்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஒரு மணி நேர போராட்டத்தால், அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், போலீசார் பேச்சுவார்த்தையை அடுத்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன