Advertisement

நியூயார்க்கில் டைம்ஸ் சதுக்கம் அருகே குண்டு வெடிப்பு

அமெரிக்காவின் டைம்ஸ் சதுக்கம் அருகே உள்ள பேருந்து நிலையத்தில் குண்டு வெடித்ததால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

நியூயார்க் நகரின் மன்ஹாட்டன் பகுதியில் 42 ஆவது தெருவில், 8 ஆவது அவென்யூவில் அமைந்துள்ள பேருந்து நிலையத்தில் சற்று நேரத்திற்கு முன் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த குண்டுவெடிப்பை அடுத்து, அப்பகுதியில் உள்ள சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன. டைம்ஸ் சதுக்கப் பகுதிக்குள் பார்வையாளர்கள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. குண்டுவெடிப்புச் சம்பவத்தில் யாரும் காயம் அடையவில்லை எனவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

குண்டு வெடித்த சப்தம் கேட்டதால், பேருந்து நிலையத்திலும், அருகே நின்றவர்களும் அங்குமிங்கும் ஓடத்தொடங்கியதாக சம்பவ இடத்தில் இருந்த ஒருவர் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்தில், காவல்துறையினரும், தீயணைப்புப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன