Advertisement

நாளையுடன் நிறைவடைகிறது 44வது சென்னை புத்தகக்காட்சி

சென்னையில் நடைபெற்று வரும் 44வது புத்தகக்காட்சி நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் இதுவரை 12 லட்சம் புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன.

BAPASI என்றழைக்கப்படும் தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் விற்பனையாளர் சங்கத்தின் சார்பில், சென்னை அமைந்தகரையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில், புத்தகக்காட்சி நடைபெற்று வருகிறது. செய்தியாளர்களிடம் பேசிய BAPASI நிர்வாகிகள் ஆண்டுக்கு ஆண்டு புத்தக விற்பனை அதிகரித்து வருவதாக கூறினர். கடந்த ஆண்டு புத்தகக்காட்சியில் 10 லட்சம் புத்தகங்கள் விற்பனையான நிலையில் இந்த ஆண்டில் நேற்று வரை 9 லட்சம் வாசகர்கள் வந்து 12 லட்சம் புத்தகங்களை வாங்கிச் சென்றதாகத் தெரிவித்தனர்.

திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து ஆயிரம் ஆசிரியர்களை பேருந்துகள் மூலம், மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் அழைத்து வந்துள்ளனர். கடைசி இரண்டு நாட்களில் புத்தக விற்பனை அதிகமாக இருக்கும் என்பதால் 15 லட்சம் புத்தகங்கள் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்ப்பதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன