Advertisement

நாய்களின் பாஷையை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் சாதனம் குறித்து அறிவியலாளர் ஒருவர் ஆய்வு

அமெரிக்காவில் நாய்களின் ஒலியை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிடும் நவீன சாதனம் குறித்து அறிவியலாளர் ஒருவர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். வடக்கு அரிசோனா பல்கலைக்கழகத்தின் ஆய்வாளரான கோன் ஸ்லோபோட்சிக்ஆஃப், (Con Slobodchikoff ) கணினி நிபுணர் ஒருவரின் உதவியோடு செல்லப்பிராணிகளின் பாஷையை மொழிப்பெயர்க்கும் ஆய்வில் இறங்கியுள்ளார்.

நாய்களின் குரைக்கும் ஒலி, அதன் முக பாவனையைக் கொண்டு அது என்ன சொல்ல வருகிறது என்பதை கருவி ஒன்றின் மூலம் புரிந்துகொண்டு அதனுடன் மனிதர்கள் உரையாட முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துத்துள்ளனர். இந்த கருவி சந்தைக்கு வர 10 ஆண்டுகள் ஆகும் என்றும், எதிர்காலத்தில் மனிதன் விலங்குகளுடன் உரையாடக் கூடும் எனவும் கூறப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன