Advertisement
Advertisement

முதலீட்டாளர்களிடம் பெற்ற தொகையை மோசடி செய்ததாக புகார் – திரிபுரா சிட்பண்ட் நிறுவன அலுவலகம் முற்றுகை

நாமக்கல்லில் முதலீட்டாளர்களிடம் பெற்ற தொகையை மோசடி செய்ததாக கூறி திரிபுரா சிட்பண்ட் நிறுவனத்தை முதலீட்டாளர்கள் முற்றுகையிட்டனர்.

சென்னையை தலைமை இடமாகக் கொண்ட திரிபுரா சிட்பண்ட் நிறுவனத்தின் கிளை நாமக்கல் சேலம் சாலையில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் நாமக்கல், ராசிபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள், பல்வேறு திட்டங்களின் கீழ் சீட்டு சேர்ந்து மாதமாதம் பணம் கட்டி வந்தனர். சீட்டு முடிந்ததும் சில முதலீட்டாளர்களுக்கு, நிதிநிறுவன நிர்வாகம் முதிர்வு தொகையை காசோலையாக தந்துள்ளது. ஆனால் காசோலையினை வங்கியில் செலுத்தியபோது, பணமில்லையென வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த முதலீட்டாளர்கள் 100க்கும் மேற்பட்டோர், திரிபுரா சிட்பண்ட் நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன