Advertisement

நாடு முழுவதும் 502 புதிய வழித்தடங்களில் விமான சேவை – விமான போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ தகவல்

உடான் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 502 புதிய வழித்தடங்களில் விமானம் மற்றும் ஹெலிகாப்டர் விடும் திட்டத்தை தொடங்க உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 76 விமான நிலையங்களில் இருந்து இந்த சேவை வசதியை அளிக்க முடிவு செய்திருப்பதாகவும், அசாம், பீகார், ஹரியானா, ஜம்மு காஷ்மீர், கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட நாட்டின் பெரும்பாலான மாநிலங்கள் பயன் பெறும் என்றும் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு விமானப் போக்குவரத்தை ஊக்குவிப்பதுடன், சாதாரண மக்களும் விமானத்தில் பயணிக்கவேண்டும் என்ற திட்டத்துடன் ஒரு மணிநேரம் பயணிக்கும் தூரத்திற்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் கட்டணமாக வசூலிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மத்திய அமைச்சர் குறிப்பிட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன