நாடாளுமன்றத்தை கலைக்க ஜப்பான் பிரதமர் முடிவு

ஜப்பான் நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக பிரதமர் ஷின்ஜோ அபே ((Shinzo Abe )) அறிவித்துள்ளார். அமெரிக்காவை மிரட்டும்வகையில், ((ஜப்பானின் ))குவாம் தீவிலுள்ள கடற்படைத் தளத்தைக் குறிவைத்து, வடகொரியா அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது.

வடகொரியா மீது உலக நாடுகளின் பொருளாதாரத் தடைகளுக்கு ஜப்பான் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. வடகொரியாவுக்கு எதிரான இந்த நடவடிக்கைகள் குறித்த மாதிரி வாக்கெடுப்பில் பிரதமருக்கு 44 சதவீத ஆதரவும், முக்கிய எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சிக்கு 8 சதவீத மக்கள் ஆதரவும் கிடைத்துள்ளது.

மக்கள் செல்வாக்கு உள்ளபோதே நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி மீண்டும் பிரதமராகத் திட்டமிட்டுள்ள ஷின்ஜோ அபே, வரும் 28-ம் தேதி நாடாளுமன்றத்தைக் கலைக்கப் போவதாக அறிவித்துள்ளார். இதையடுத்து, அக்டோபர் 22-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன