நாகர்கோவில் அரசு கலைக்கல்லூரியில் பேராசிரியர்கள் இல்லாததால் மாணவ,மாணவிகளே பாடம் நடத்தும் அவலம்

நாகர்கோவில் அரசு கலைக்கல்லூரியில் எவ்வித அடிப்படை வசதியும் இல்லாததால் மாணவ, மாணவிகள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். நாகர்கோவிலில் வடசேரி அரசு உயர்நிலைப்பள்ளியில் இயங்கி வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மின்சாரம், வகுப்பறை உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை என்று புகார் எழுந்துள்ளது.

போதிய பேராசிரியர்கள் இல்லாததால் தாங்களே வகுப்புகளை நடத்திக் கொள்வதாக மாணவ-மாணவிகள் கூறுகின்றனர். இந்த விஷயத்தில் அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவ- மாணவிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன