Advertisement

நஷ்டத்தை ஈடுகட்டவே பேருந்து கட்டண உயர்வு – அண்ணா தொழிற்சங்க பொதுச் செயலாளர் சின்னசாமி

போக்குவரத்துத்துறையில் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடு செய்யவே பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக அண்ணா தொழிற்சங்க பொதுச்செயலாளர் சின்னசாமி தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொழிலாளர்களின் பணத்தை போக்குவரத்துத்துறைக்கு செலவிட்டதாலேயே நிதிச்சுமை ஏற்பட்டதாகவும், தற்போது கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால், தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என்று கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன