Advertisement

நடுக்கடலில் பலத்த காற்று வீசியதால் கவிழ்ந்த படகு – மீனவர் ஒருவர் உயிரிழப்பு

தூத்துக்குடியில் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது நாட்டுப் படகு கவிழ்ந்த விபத்தில் மீனவர் ஒருவர் உயிரிழந்தார். தூத்துக்குடி பூபால ராயர்புரத்தை சேர்ந்த ஜேசுராஜ் என்பவரின் நாட்டுப் படகில் 5 மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டு இருந்தபோது கடலில் பலத்த காற்றுடன் மழை பெய்ந்துள்ளது. இதனால், இவர்களது படகு கடலில் கவிழ்ந்து 5 மீனவர்களும் கடலில் தத்தளித்தனர்.

அப்போது அவ்வழியாக கரை திரும்பிய மற்றொரு படகின் மீனவர்கள், கடலில் தத்தளித்த அனைவரையும் மீட்டனர். ஆனால் மீனவர் கென்னடி என்பவர் கரைக்குக் கொண்டு வரும் வழியில் உயிரிழந்தார். கென்னடியின் உடலை மீட்ட கடலோர காவல்படையினர், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன