நடிகர் விஷால் வீட்டில் காணமல் போன ”ஜிமிக்கி கம்மல்” காவல் நிலையத்தில் ஒப்படைப்பு

நடிகர் விஷால் வீட்டில் நகைகளை திருடிய பணிப்பெண் காவல் நிலையத்தில் நகைகளை ஒப்படைத்ததால் கைது நடவடிக்கை எடுக்காமல் விடுவிக்கப்பட்டார்.

கடந்த 8-ம் தேதி அண்ணா நகரில் உள்ள விஷால் வீட்டில் இருந்து 3 ஜிமிக்கி கம்மல், 3 மோதிரங்கள் திருடு போனது. இது தொடர்பாக விஷால் மேலாளர் ரகுபதி கொடுத்த புகாரில், வீட்டில் வேலை பார்த்த பணிப்பெண் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்தார். பணிப்பெண் புஷ்பாவை போலீசார் தேடி வந்த நிலையில் அண்ணா நகர் காவல் நிலையத்தில் அவராகவே சரணடைந்தார். கவரிங் நகை என நினைத்து திருடி சென்று விட்டதாகவும், தங்க நகை என தெரிந்ததால் ஒப்படைத்து விட வந்ததாகவும் கூறியுள்ளார்.

இதையடுத்து அவர் மீது கொடுத்த புகாரை விஷாலின் மேலாளரும் திரும்ப பெற்று கொண்டதால் கைது நடவடிக்கை இல்லாமல் பணிப்பெண்ணை அனுப்பி வைத்தனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன