நடிகர் திலீப்பின் ஜாமின் மனு மீது நாளை உத்தரவு

கேரள நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் சிறையில் உள்ள நடிகர் திலீப்பின் ஜாமின் மனு மீது நாளை உத்தரவு வெளியாகிறது.

நடிகர் திலீப்பின் காவல், 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அலுவா நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு அவரது தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கெனவே மூன்று முறை ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மனு தள்ளுபடி ஆன நிலையில், நான்காவது முறையாக தாக்கல் செய்த மனு மீதாவது உரிய பலன் கிடைக்குமா என்று திலீப் காத்திருக்கிறார்.

அவருக்கு ஜாமின் கிடைக்குமா? அல்லது மீண்டும் நிராகரிக்கப்படுமா? என்பது நாளை தெரிய வரும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன