நடராஜன், பாஸ்கரன் மீதான அன்னியச் செலாவணி வழக்கு

சசிகலா கணவர் நடராஜன் மற்றும் உறவினர் பாஸ்கரன் மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கு விசாரணை இம்மாத இறுதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

சொகுசு கார் இறக்குமதி செய்ததில், அன்னிய செலாவணி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கு இன்று சென்னை எழும்பூரில் உள்ள அல்லிகுளம் வளாகம், 2 வது பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு தரப்பு சாட்சியிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது.

அமலாக்கத்துறை சார்பில் வங்கி ஆவணங்களின் நகல்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

இதையடுத்து, வங்கி ஆவணங்களின் அசல் ஆவணங்களை சமர்ப்பிக்க உத்தரவிட்ட சென்னை எழும்பூர் 2 வது பொருளாதார குற்றவியல் நீதித்துறை நடுவர் மலர்மதி வழக்கு விசாரணையை வரும் 31-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன