தேவையற்ற செல்பேசி அழைப்புகளை பெறுவதில் இந்தியர்கள் முதல் இடம்

உலகிலேயே தேவையற்ற செல்பேசி அழைப்புகளை பெறுவதில் இந்தியர்கள் முதல் இடத்தில் உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கிரடிட் கார்டு, வங்கி கடன், ரியல் எஸ்டேட் உள்ளிட்டவை சார்ந்த தேவையற்ற அழைப்புகள் செல்போன் எண்ணுக்கு வருவது வழக்கம்.

இத்தகைய ஸ்பேம் கால்ஸ் எனப்படும் தேவையற்ற அழைப்புகளை, உலகளவில் அதிகமாக பெறும் வாடிக்கையாளர்களை கொண்டு நாடு எது என ட்ரூகாலர் நிறுவனம் ஆய்வு நடத்தியது.

அதில், இந்திய வாடிக்கையாளர்களுக்கு செல்போன் சேவை வழங்கும் நிறுவனங்களே 54 சதவீதம், தேவையற்ற அழைப்புகளை கொடுத்து தொல்லை செய்வதாக கூறப்பட்டுள்ளது.

வர்த்தக நிறுவனங்கள் 21 சதவீதம் தேவையற்ற அழைப்புகளையும், வேண்டுமென்றே தொல்லை செய்யும் வகையில் 20 சதவீத அழைப்புகளும் வருவது தெரிய வந்துள்ளது.

இந்த பட்டியலில் இந்தியாவிற்கு அடுத்தபடியாக அமெரிக்காவும், அதற்கு அடுத்த இடத்தில் பிரேசிலும் உள்ளன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன