Advertisement

தேர்தல் ஆணையம் குறித்து விஷால் தெரியாமல் பேசுகிறார் – OS மணியன்

தேர்தல் ஆணையம் குறித்து நடிகர் விஷால் எதுவும் தெரியாமல் பேசுவதாக அமைச்சர் ஓ.எஸ். மணியன் கூறியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்குப் பின் அமைச்சர் ஓ. எஸ். மணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ஆர்.கே.நகர் தொகுதியில் நடிகர் விஷால் மனு நிராகரிப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, தேர்தல் ஆணையம் என்பது தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பு என்று பதில் கூறிய அமைச்சர், அதன் நடவடிக்கையில் யாரும் தலையிட முடியாது என்றும் இதுபற்றிய விபரம் தெரியாமல் நடிகர் விஷால் பேசுவதாகவும் குறிப்பிட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன