Advertisement

தேர்தலின் போது விதிக்கப்படும் பிரச்சார தடை சட்டத்தில் திருத்தம் செய்ய திட்டம்

தேர்தலுக்கு முந்தைய 48 மணிநேரத்தில் பிரச்சாரம் செய்ய தடை விதிக்கும் சட்டத்தில் திருத்தங்கள் செய்ய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. தடை அமலில் இருக்கும் இரண்டு நாட்களில், சமூக வலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சிகள் மூலம் அரசியல் கட்சியினர் மறைமுகமாக ஆதரவு திரட்டுவதாக புகார்கள் வந்தன.

இதன் விளைவாக தேர்தல் விதிமுறைகளில் திருத்தங்கள் செய்வது குறித்து ஆராய தேர்தல் ஆணையம் தனிக்குழு ஒன்றை அமைத்துள்ளது. சட்டத்துறை, தகவல் தொழில் நுட்பம், ஒளிபரப்பு உள்ளிட்ட துறைகளின் பிரதிநிதிகளும் குழுவில் இடம்பெற உள்ளனர். தேர்தலின் போது சமூக வலைதளங்கள் மூலம் தேர்தல் விதிமுறைகள் மீறப்படுகிறதா என்பது குறித்து இந்த குழு ஆய்வு செய்ய உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன