பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக சுதீஷ் மீது வழக்குப்பதிவு

திருச்சியில் முன் அனுமதி பெறாமல் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம், துண்டு பிரசுரங்களை வழங்கி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி காந்தி மார்க்கெட்டில் தேமுதிக சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுதீஷ், பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம், துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

இந்நிலையில் அனுமதி பெறாமல் சட்டத்திற்கு புறம்பாக கூடுதல், பொதுமக்களுக்கு இடையூறு செய்தல், பொது இடத்தில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் சுதீஷ் உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன