தேச பாதுகாப்புக்காக புதிய அதிகார மையத்தை உருவாக்குகிறது மத்திய அரசு

தேச பாதுகாப்புக்காக ஒருங்கிணைந்த சட்ட அமலாக்க மையங்களை அமைக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

மூத்த ஐபிஎஸ் அதிகாரியான சந்தோஷ் மெஹ்ரா அளித்த அறிக்கையில் இதற்கான பரிந்துரை ஒன்று உள்துறை அமைச்சகத்தின் பரீசிலனையில் உள்ளது.எல்லைத் தாண்டிய தீவிரவாதம், நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் பெரிய அளவிலான சமூக குற்றங்கள் போன்றவற்றை எதிர்கொள்ள இந்த மையங்கள் பயன்படுத்தப்படும். எல்லை பாதுகாப்புப் படை, உளவுத்துறை, தேசிய புலனாய்வு அமைப்பு, போதைப் பொருள் தடுப்பு பிரிவு ,அமலாக்கத்துறை, சுங்கத்துறை, காவல்துறை, வனத்துறை போன்ற பல்வேறு துறைசார்ந்த அதிகாரிகள் இந்த மையங்களில் இணைக்கப்படுவார்கள். எல்லைத் தாண்டிய தீவிரவாதம், கள்ள நோட்டுகள் புழக்கம், ஆயுதக் கடத்தல், போதைப் பொருள் கடத்தல் போன்ற பல்வேறு குற்றங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க இந்த சட்ட அமலாக்க மையங்கள் பயன்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன