Advertisement

தெருவில் நடந்து சென்ற பள்ளிச் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு

மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் தெருவில் நடந்து சென்ற பள்ளிச் சிறுமியை இளைஞர் ஒருவர் பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தி, கன்னத்தில் அறையும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

கடந்த செவ்வாய் அன்று, நேரு நகர் காவல்நிலையத்திற்குட்பட்ட பரபரப்பான பகுதியில் மைனர் சிறுமி ஒருவர் மாலை வேளையில் ட்யூசனுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது இளைஞர் ஒருவர் சிறுமிக்கு பாலியல் ரீதியாக சீண்டியுள்ளார்.

இதற்கு சிறுமி எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டதால், அந்த இளைஞன் வந்து, அச்சிறுமியை சரமாரியாக கன்னத்தில் அறையும் காட்சிகள் வெளியாகியுள்ளன. இதை அங்கிருந்த பலரும் தடுக்காமல் வேடிக்கை மட்டுமே பார்த்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன