Advertisement

தென்கொரியாவுக்கு தப்ப முயன்ற ராணுவ வீரரை சுட்ட வட கொரிய வீரர்கள்

வடகொரியாவில் இருந்து தப்பிக்க முயன்ற ராணுவ வீரரை, சக நாட்டு ராணுவ வீரர்களே சுட்டுவீழ்த்திய வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

வடகொரியாவில் இருந்து தப்பிக்க முயன்ற ராணுவ வீரர் ஒருவர், பல தடைகளை கடந்து ஜீப் ஒன்றின் மூலம் எல்லைக்கு வந்து, அங்கிருந்து தென்கொரியாவுக்குள் தப்பிக்க முயன்றார்.

இதை அறிந்த வட கொரிய ராணுவ வீரர்கள், எல்லையில் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். குண்டடி பட்டு அவர் தென்கொரிய எல்லைக்குள் விழுந்துவிட்டதால், அப்படியே விட்டுச் சென்றனர். இந்த காட்சி தென்கொரிய எல்லையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.

சம்பவ இடத்துக்கு வந்த தென்கொரிய ராணுவ வீரர்கள், காயமடைந்தவரை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு 2 முறை அறுவைச் சிகிச்சை செய்த பின்னர், அவர் நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன