Advertisement

தென்கொரியப் பெண்ணிடம் பாலியல் அத்துமீறல் – குர்கானில் 4 பேர் கைது

ஹரியானா மாநிலம் குர்கானில் தென்கொரியப் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குர்கான் அருகே பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் தென்கொரியப் பெண்ணும் அவரது நண்பரும் செராவன் ((Sehrawan)) என்ற இடத்தில் நின்று கொண்டிருந்த போது 4 பேர் அவரது அனுமதியின்றி அவருடன் செல்ஃபியும் வீடியோவும் எடுத்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்தப் பெண் சண்டையிட்டதையடுத்து அவரிடம் அவர்கள் முறைதவறி நடந்துகொண்டதாகவும், அதனைத் தடுக்க முயன்ற அந்தப் பெண்ணின் நண்பரைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் 4 பேரையும் கைது செய்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன