தூர்வாருவது என்ற பெயரில் மணல் அள்ளி விற்பனை

குலசேகரம் அருகே கண்டனசேரி குளத்தை அரசு சார்பில் தூர்வாரும் பணிகள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

இங்கு, அனுமதித்த அளவைவிட, அதிக ஆழத்திற்கு ஒப்பந்ததாரர்கள் மணல் அள்ளுவதுடன், அதை விற்று கொள்ளை லாபம் பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஜேசிபி இயந்திரம், லாரிகளை சிறைப்பிடித்தனர்.

அவர்களுடன் பத்மநாபபுரம் கோட்டாட்சியர் ராஜேந்திரன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, மணலை விற்பனை செய்ததாக குற்றம் சாட்டப்படும் நபர்களை விசாரிக்காமல், மணலை யார் வாங்கினார்களோ அவர்களை பிடித்து வந்தால் விசாரணை நடத்துவதாக அலட்சியமாக பதிலளித்தார்.

இதையடுத்து, ஆத்திரமடைந்த பொதுமக்கள், திருடர்களை பொதுமக்களே தேடி பிடித்து கொடுக்க வேண்டும் என்றால் பின்னர் எதற்கு அதிகாரிகள் என்று கேள்வி எழுப்பினர்.

தூர் வாருவதில் நடக்கும் முறைகேடுகள் குறித்து போராட்டம் நடத்தப் போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன