தூய்மையே சேவை வாகன பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார் முதல்வர்

தூய்மையே சேவை திட்டத்தின் விழிப்புணர்வு வாகன பிரச்சார பயணத்தை சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். சேலம் மாவட்டம் ஜவகர் மில் திடலில் சுகாதாரத்துறை சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி நடைபெற்றது. மக்கள் தூய்மையைப் பேணி சுகாதாரத்தை போற்றும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தூய்மை வாகனப் பிரச்சாரத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, மக்கள் ஒவ்வொருவரும் தூய்மையைக் கடைபிடிக்க வேண்டும் என்று கூறினார். டெங்குவவை ஒழிக்க மக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இந்த விழாவில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வேலுமணி, எம்.பி.க்கள்., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் ரோஹினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!