துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடியை இன்று சந்திக்க திட்டம்

துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடியை இன்று சந்திக்க திட்டமிட்டுள்ளார். நேற்றிரவு சென்னையில் இருந்து புறப்பட்ட அவர், மைத்ரேயன், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோருடன் டெல்லி வந்து சேர்ந்தார்.

துணை முதல்வராக பதவியேற்ற பின்னர், முதல்முறையாக இரட்டை இலை வழக்கு விசாரணைக்காக டெல்லி வந்திருந்த பன்னீர்செல்வம் பிரதமரை சந்திக்க டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஓ.பி.எஸ். பிரதமரை இன்று காலை 11 மணிக்கு சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன