தீவிபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது – தீயணைப்புத்துறை இயக்குநர் ஜார்ஜ்

சென்னை கொடுங்கையூரில் நடைபெற்ற தீவிபத்து குறித்து, விசாரணை நடைபெற்று வருவதாக தீயணைப்புத்துறை இயக்குநர் ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை கீழ்ப்பாக்கம் தீயணைப்பு நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த ஏகராஜ் உடலுக்கு தீயணைப்புத்துறை இயக்குநர் ஜார்ஜ், இணை இயக்குநர் ஷாகுல் ஹமீது உள்ளிட்ட தீயணைப்புத்துறை அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். பின்னர், ஏகராஜின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்த ஜார்ஜ், எதிர்பாராதவிதமாக சிலிண்டர் வெடித்ததால், தீயணைப்புத்துறை வீரர்கள், போலீசார் மற்றும் பொதுமக்கள் காயமடைந்ததாக தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன