தீபாவளி நெரிசலை குறைக்க மதுரை போலீசார் புதிய ஏற்பாடு கூகுள் மேப் வரைபடம்

மதுரை மாநகரத்தில் தீபாவளி போக்குவரத்து நெரிசலைக் குறைக்க கூகுள் மேப் மூலம் வாகனநிறுத்தம் குறித்த தகவல்கள் தரப்படுகின்றன.

தீபாவளி நேரத்தில் மதுரை மாநகரில் போக்குவரத்து இடையூறு இல்லாமல் இருக்க பல்வேறு இடங்களில் புதிய தற்காலிக வாகன நிறுத்தும் இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதுமட்டுமில்லாமல் வாகன நிறுத்துமிடம், போக்குவரத்து நெரிசல்மிக்க பகுதிகள் போன்றவற்றை ஸ்கிரீன் ஷாட் மூலம் பொதுமக்கள் தங்கள் கைபேசியில் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியையும் போலீசார் உருவாக்கி உள்ளனர்.

Google playstore மூலம் Dipawali 2017- Madurai city traffic Police என்ற வரைபடத்தை தரவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் இதனால் மக்கள் சிரமம் இல்லாமல், தீபாவளி பொருள்களை வாங்கி செல்ல முடியும் என்றும் காவல் ஆணையர் அகர்வால் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன