தீபவாளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு கவுண்டர்கள் திறப்பு

தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு கவுண்டர்களை தொடங்கி வைத்த போக்குவரத்துத்துதுறை அமைச்சர் விஜயபாஸ்கர், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் சிறைபிடிக்கப்படும் என்று தெரிவித்தார். தீபாவளியை ஒட்டி வெளியூர்களுக்கு செல்வோரின் வசதிக்காக சென்னை கோயம்பேடு, தாம்பரம் மற்றும் பூந்தமல்லியில் மொத்தம் 29 முன்பதிவுக் கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.

கோயம்பேட்டில் மாற்று திறனாளிகளுக்கு 2 கவுண்டர்கள், பெண்களுக்கு 2 கவுண்டர்கள், முதியோர்களுக்கு 1 கவுண்ட்டர் உட்பட 26 கவுண்ட்டர் திறக்கப்பட்டுள்ளது. தாம்பரத்தில் 2 கவுண்ட்டர்களும், பூந்தமல்லியில் 1 கவுண்ட்டரும் திறக்கப்பட்டுள்ளது. இந்த கவுண்ட்டர்களை இன்று அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் சிறைபிடிக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் பேருந்துகள் புறப்படும் இடங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதன்படி ஆந்திர மாநிலத்துக்குச் செல்லும் பேருந்துகள் அண்ணாநகர் மேற்கில் இருந்து செங்குன்றம் வழியாகச் செல்லும். புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகில் இருந்து கடற்கரைச்சாலை வழியாகச் செல்லும்.

கும்பகோணம் தஞ்சாவூர் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் தாம்பரம் சானடோரியத்தில் இருந்து புறப்பட்டு விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாகச் செல்லும் என்று தெரிவிக்கபப்ட்டுள்ளது. வேலூர், ஆர்க்காடு தருமபுரி, ஓசூர் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லும் பேருந்துகள் பூந்தமல்லியில் இருந்து புறப்படும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் திருவண்ணாமலை உள்ளிட்ட சுற்றுப்பகுதி மாவட்டங்களுக்கும் பேருந்துகள் புறப்படும்

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன