Advertisement

தி.மு.கவின் முரசொலி பவள விழாவில் நடிகர் ரஜினி, கமல் பங்கேற்க இருப்பதாக தகவல்

தி.மு.கவின் முரசொலி நாளிதழ் பவள விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் வரும் எட்டாம் தேதி முரசொலியின் பவள விழா தி.மு.க சார்பில் பிரமாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. கலைவாணர் அரங்கில் நடைபெறும் இந்த விழாவில் அரசியல் தலைவர்கர் மட்டும் இன்றி பல்துறை கலைஞர்களுக்கும் தி.மு.க சார்பில் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. அந்த வகையில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கும் முரசொலி விழாவில் பங்கேற்குமாறு அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும், தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடிகர்கள் ரஜினி மற்றும் கமல் விழாவில் பங்கேற்க வேண்டும் என்று அழைத்ததாக சொல்லப்படுகிறது. இதனை ஏற்று ரஜினி மற்றும் கமல் முரசொலி விழாவில் பங்கேற்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அண்மையில் சிஸ்டம் சரியில்லை என்று பேசிய ரஜினிகாந்த் அரசியலுக்கு வர இருப்பதாக ஆருடங்கள் கூறப்பட்டு வருகிறது. இதே போல் நடிகர் கமல்ஹாசனும் அ.தி.மு.க அரசை கடுமையாக விமர்சித்து அரசியல் மைய நீரோட்டத்தில் இணைந்துள்ளார். இந்த நிலையில் தமிழகத்தின் பிரதான எதிர்கட்சியான தி.மு.கவின் விழாவில் ரஜினி மற்றும் கமல் பங்கேற்க உள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன