Advertisement
Advertisement

திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை விதிக்க மறுப்பு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை விதிக்க மறுத்து விட்ட சென்னை உயர் நீதிமன்றம் அதில் எடுக்கப்படும் தீர்மானம் அனைத்தும் வழக்கின் இறுதி தீர்ப்பிற்கு கட்டுப்பட்டது என உத்தரவிட்டுள்ளது.

நடிகர் விஷால் தலைமையில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கேட்டு தயாரிப்பாளர்கள் கிஷோர், வடிவேல் உள்ளிட்ட 3 பேர் வழக்கு தொடர்ந்தனர். 3 படங்கள் தயாரித்து இருப்பவர்களுக்கு மட்டுமே வாக்குரிமை என சங்க விதிகளில் நிர்வாகிகள் திருத்தம் கொண்டு வருவதால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டு அவர்களது வாக்குரிமை பாதிக்கப்படும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன், தயாரிப்பாளர்கள் சங்க பொதுக் குழுக் கூட்டத்துக்கு தடை விதிக்க மறுத்து விட்டார். ஆனால், பொதுக்குழுக் கூட்ட முடிவுகள் நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என்று தெரிவித்து, அடுத்த விசாரணையான 13-ஆம் தேதியன்று மனு குறித்து பதில் அளிக்குமாறு தயாரிப்பாளர் சங்க பொதுச் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன