Advertisement

திருவள்ளூரில் தொடர் மழையால் தாமரை ஏரி நிரம்பி வழிகிறது

திருவள்ளூர் மாவட்டத்தில் தாமரை ஏரி நிரம்பியதால் அதிலிருந்து வெளியேறிய உபரிநீர் ஊருக்குள் புகுந்தது. ரெட்டம்பேடு செல்லும் கூட்டுசாலையில் சிக்னல் பின்புறம் அமைந்த தாமரை ஏரி தொடர்மழைக்கு முழுவதும் நிரம்பியது. அதில் ஏரியில் இருந்து வெளியேறிய உபரி நீர் கால்வாய்கள் ஆக்கிரமிப்பினால் கழிவு நீர் கலந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.

குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்களும், சாலையின் இருபுறமும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்கு ஆளாயினர். தகவலறிநது வந்த கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அதிகாரிகள் ஜேசிபி எந்திரங்களை கொண்டு ஆக்கிரமிக்கப்பட்ட கால்வாய்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன