திருவள்ளூரில் தொடர் கனமழையால் 245 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டின

திருவள்ளுர் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக 245 ஏரிகள் நிரம்பியுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளின் நீர்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக புழல் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி, சோழவரம் ஏரி ஆகியவை வேகமாக நிரம்பி வருகின்றன.

இதேபோல் ஆந்திர மாநிலம் அம்மப்பள்ளி அணையில் இருந்து கொசஸ்தலையாற்றில் கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி 50 சதவீதமும், சோழவரம் ஏரி 75 சதவீதமும் நிரம்பியுள்ள நிலையில், கொளத்தூர் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 591 ஏரிகளில், 245 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன