திருமலைக்குச் செல்லும் முதலாவது மலைப்பாதையில் மண் சரிவு

திருப்பதி திருமலைக்குச் செல்லும் முதலாவது மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால், நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருப்பதி ஏழுமலையான் கோயில் முதலாவது மலைப்பாதையில் அக்ககார்லகுடி, அருகே பக்தர்கள் நடந்து செல்லும் பகுதியில் திடீரென மரம் ஒன்று வேருடன் சரிந்து விழுந்தது.

அத்துடன் அங்கு மண் சரிவும் ஏற்பட்டது. அப்போது பக்தர்கள் யாரும் அவ்வழியே செல்லாததால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. விபத்தையடுத்த்டு ஜி.என்.சி. சோதனை சாவடி அருகே திருப்பதிக்கு வரும் அனைத்து வாகனங்களும் நிருத்தப்பட்டன.

அலிபிரி மலைப்பாதை வழியாக பாத யாத்திரையாக வரும் பக்தர்கள், நரசிம்ம சுவாமி கோயில் அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். சாலையில் விழுந்துள்ள மரத்தையும் பாறைகளையும் அகற்றும் பணியில் தேவஸ்தான அதிகாரிகள் மும்முரமாக ஈடுப்பட்டு வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன