Advertisement

திருமண மண்டபத்தில் வாக்காளருக்குப் பணம் வழங்குவதாக குற்றஞ்சாட்டி தினகரன் ஆதரவாளர்கள் தேர்தல் அதிகாரியை முற்றுகை

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட நேதாஜி நகரில் ஒரு திருமண மண்டபத்தில் அமைச்சர் முன்னிலையில் வாக்காளர்களுக்குப் பணம் வழங்கப்படுவதாகக் கூறித் தேர்தல் அதிகாரியிடம் தினகரன் ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட நேதாஜிநகர் ஐந்தாம் தெருவில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அமைச்சர் செல்லூர் ராஜ் தங்கியிருப்பதாகவும், அவர் முன்னிலையில் வாக்காளர்களுக்குப் பணம் வழங்கப்படுவதாகவும் கூறித் தேர்தல் அதிகாரிக்குத் தினகரன் ஆதரவாளர்கள் தகவல் தெரிவித்தனர். அப்போது அங்கு வந்த தேர்தல் அதிகாரி செல்வக்குமாரை முற்றுகையிட்டுத் திருமண மண்டபத்துக்குச் சென்று விசாரணை நடத்துமாறு அவர்கள் வலியுறுத்தினர். இது குறித்துத் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளிக்குமாறு அவர்களிடம் தேர்தல் அதிகாரி செல்வக்குமார் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன