பெட்ரோல் பங்க் உரிமையாளர் துப்பாக்கியால் சுட்டு கொள்ளையடித்த மர்ம நபர்கள்

தலைநகர் டெல்லியில், பெட்ரோல் பங்கு உரிமையாளரிடம் பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்கள், அவரை சுட்டுவிட்டு தப்பிச்செல்லும் சிசிடிவி பதிவுகள் வெளியாகியிருக்கின்றன.

மால்வியா நகரில்(Malviya Nagar), கமால்ஜீத் சேத்தி(Kamaljeet Sethi) என்பவர், பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். இவர், பெட்ரோல் பங்கில் வசூலான பணத்தை எடுத்துக் கொண்டு அருகிலுள்ள வங்கியில் டெபாசிட் செய்ய சென்றார். இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள், வங்கி அருகில் கமால்ஜீத் சேத்தி வந்தபோது, அவரிடமிருந்த பணத்தை பறித்துக் கொண்டதோடு, துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர். இந்த சம்பவத்தின் CCTV காட்சிகள் வெளியாகியிருக்கின்றன…

துப்பாக்கியால் சுடப்பட்ட பெட்ரோல் பங்க் உரிமையாளர் கமால்ஜீத் சேத்தி, படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்த சம்பவம், டெல்லி மால்வியா நகர் காவல்நிலையத்திலிருந்து 200 மீட்டர் தூரத்தில் நடைபெற்றிருக்கிறது.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன