திருப்பூர் ரயில் நிலைய லிப்ட்டுக்குள் சிக்கிய பயணிகள்

திருப்பூர் ரயில் நிலைய லிப்ட்டில் சிக்கிய பயணிகள் 25 நிமிடத்திற்கு பின் மீட்கப்பட்டனர். ஈரோட்டைச் சேர்ந்த சண்முகம் என்பவர் ஊருக்கு செல்வதற்காக திருப்பூர் ரயில் நிலையம் வந்துள்ளார். லிப்டில் சென்றபோது, திடீரென பழுதாகி நடுவழியில் நின்றது. லிப்டில் அவசர அழைப்பு ஏதும் இல்லாததால், அவருடன் வந்த மற்றொரு பயணி தன் உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பின்னர் ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு 25 நிமிடங்கள் கழித்து இருவரும் மீட்கப்பட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன