Advertisement

திருப்பூர் நல்லதங்காள் ஓடை நீர்த்தேக்கம் பாசனத்திற்காக திறப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள நல்லதங்காள் ஓடை நீர்த்தேக்கத்திலிருந்து விவசாயப் பணிகளுக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த அணையின் மூலம் சுமார் ஐந்தாயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அண்மையில் பெய்த கனமழையால் நீர்த்தேக்கத்தில் போதிய தண்ணீர் இருப்பதாலும், வேளாண் பணிகளை தொடங்க வசதியாகவும், தண்ணீரைத் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்பேரில், ஈரோடு எம்பி செல்வக்குமார சின்னையன், மதகுகளை இயக்கி தண்ணீரைத் திறந்து விட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன