திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் அஜித் சாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் அஜித்குமார் சுவாமி தரிசனம் செய்தார்.

பல்கேரியாவில் விவேகம் திரைப்படத்தின் படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வந்த நடிகர் அஜித் குமார், கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை திரும்பினார். இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சென்ற அவர், இன்று காலை நடந்த சுப்ரபாத சேவையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். அப்போது, திருப்பதி கோயிலில் சாமி கும்பிட வந்திருந்த சில ரசிகர்கள் நடிகர் அஜித்குமாருடன் கைகுலுக்கியும், செல்ஃபி எடுத்தும் மகிழ்ந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன