திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆனி வார ஆஸ்தானம் மலையப்ப சுவாமி வீதி உலா

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆனி வார ஆஸ்தானத்தையொட்டி புஷ்ப பல்லக்கில் மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கோயிலின் வருடாந்திரக் கணக்கு முடித்து புதிய கணக்கு தொடங்கும் ஆனி வார ஆஸ்தானம் நேற்று சம்பிரதாய முறைப்படி நடைபெற்றது. இதையொட்டி ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து கொண்டு வரப்பட்ட பட்டு வஸ்திரங்கள் சுவாமிக்கு சமர்பிக்கப்பட்டது. பின்னர், அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் நான்கு மாட வீதிகளில் சுவாமி வலம் வந்தார். நான்கு மாட வீதியில் இருபுறமும் குவிந்திருந்த பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்கி கற்பூர ஆரத்தி எடுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன