Advertisement

திருச்செங்கோடு வித்யபாரதி பள்ளி மாணவன் விடுதியில் தற்கொலை

நாமக்கல் மாவட்டத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவன் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி நடுக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் என்பவரின் மகன் விருத்தீஸ்வரன். இவர் திருச்செங்கோடு அடுத்த சக்கராம் பாளையத்தில் உள்ள வித்ய பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் ஒன் படித்து வந்தார்.

பொங்கல் விடுமுறை முடிந்து பள்ளிக்குச் சென்ற விருத்தீஸ்வரன் நேற்று மதியம், விடுதியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவர் மரணம் குறித்து விடுதி காப்பாளர் விஜயகுமார் முன்னுக்குப் பின் பேசுவதால் விருத்தீஸ்வரன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன