திருச்சி, ஸ்ரீரங்கம் ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் சோதனையின் தொடர்ச்சி

திருச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையையடுத்து, பெண் ஊழியர் ஒருவர் உட்பட 9 பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

திருச்சி கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கணக்கில் காட்டப்படாத 43 ஆயிரம் ரூபாய் பணமும், ஸ்ரீரங்கம் வட்டாரப்போக்குவரத்து அலுவலகத்தில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 120 ரூபாய் பணம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக, ஸ்ரீரங்கம் வட்டார போக்குவரத்து அலுவலக பெண் ஊழியர் ஜென்சி மற்றும் 7 இடைத்தரகர்கள் உட்பட 9 பேர் மீது லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன