Advertisement

திருச்சி, மெட் ஆல் மருத்துவமனையின் ஸ்கேன் பிரிவுக்கு சீல் வைத்த அதிகாரிகள்

திருச்சி தில்லை நகரில் விதிமுறைகளுக்குப் புறம்பாக இயங்கி வந்ததாகக் கூறி பிரபல மெட் ஆல் மருத்துவமனையின் ஸ்கேன் பிரிவு பூட்டி சீல் வைக்கப்பட்டது.

மெட் ஆல் டயாக்னாஸ்டிக்ஸ் ( Diagnostics ) மருத்துவமனையின் ஸ்கேன் பிரிவு விதிகளுக்குப் புறம்பாக இயங்கி வருவதாக வந்த தகவலை அடுத்து, மருத்துவத்துறை இணை இயக்குநர் தலைமையிலான அதிகாரிகள், அங்கு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சித்த மருத்துவம் படித்த ஒருவர் ஸ்கேன் இயந்திரத்தை இயக்கி வருவதை கண்டறிந்தனர். மருத்துவம் படித்து 6 மாதம் சிறப்புப் பயிற்சி பெற்று, தேர்வு எழுதி வெற்றி பெற்றால் மட்டுமே ஸ்கேன் இயந்திரத்தை இயக்க வேண்டும். ஆனால் நாள்தோறும் நூற்றுக்கணக்கான கர்ப்பிணிப் பெண்கள் வந்து செல்லும் மெட் ஆல் டயாக்னாஸ்டிக்ஸ் மருத்துவமனையில் சித்த மருத்துவம் படித்த ஒருவர் ஸ்கேன் இயந்திரத்தை கையாண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து மருத்துவமனையின் ஸ்கேன் பிரிவை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன