திருச்சி மாநகரில் போலீசின் ரெட் அலர்ட் அமல்படுத்தப்பட்டுள்ளது

திருச்சி மாநகரில் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோரை பிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் 168 இடங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களில் மட்டும் 10க்கும் மேற்பட்ட செயின் பறிப்பு உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடந்துள்ளன. குற்ற செயல்களில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க பல்வேறு நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று திருச்சி மாநகரம் முழுவதும் ரெட் அலார்ட் எனப்படும் அவசரகால துரித நடவடிக்கை அமல்படுத்தப்பட்டுள்ளது.

நகரின் 168 இடங்களில் 400க்கும் மேற்பட்ட போலீசார் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மக்கள் நடமாட்டம் குறைவாக உள்ள இடங்களில் இருசக்கர வாகனத்தில் ரோந்து செல்லும் போலீசார், சந்தேகப்படும்படியான நபர்களைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன