Advertisement

திருச்சி கலிங்கப்பட்டியில் களைகட்டிய ஜல்லிக்கட்டு

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் திமிறிய காளைகளை வீரத்துடன் அடக்கிய காளையர்களுக்கு ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன.

மணப்பாறையை அடுத்த கலிங்கப்பட்டி மாரியம்மன் கோவில் திடலில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியை திருச்சி எம்.பி.குமார் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

இதில் திருச்சி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 600க்கும் மேற்பட்ட காளைகள் பங்குபெற்றன. 250க்கும் மேற்பட்ட மாடுபிடிவீரர்கள் கலந்து கொண்டு, வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க முயன்றனர்.

காளைகளை அடக்கி வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும், கட்டில், பீரோ, சைக்கிள், தங்ககாசு உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன