திருச்சிராப்பள்ளி:விமானநிலையத்தில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூபாய் 25 லட்சம் மதிப்புள்ள ஒரு கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை தலைநகர் கொழும்புவிலிருந்து திருச்சி வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான பயணிகளிடம் திருச்சி விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கலைவாணி, ஷெட்டி சபீனா என்ற பயணிகள் இருவரும் தங்கள் உடை மற்றும் உடைமைகளில் ஆயிரத்து 60 கிராம் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன