Advertisement

திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து சட்டப்பேரவைகளின் தேர்தல் தேதிகளை இன்று அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்

திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்க உள்ளது.

தலா 60 உறுப்பினர்களை கொண்ட மேகாலயா, நாகாலாந்து மற்றும் திரிபுரா சட்டப்பேரவைகளின் பதவிக் காலம், முறையே மார்ச் மாதத்தில் 6, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் முடிவடைகிறது. எனவே இந்த 3 மாநில சட்டப்பேரவைகளுக்கும் விரைவில் தேர்தல் நடத்தப்பட உள்ளது.

இதற்காக ஏற்கெனவே 4 பேர் கொண்ட தேர்தல் ஆணைய குழு, 3 மாநிலங்களுக்கும் சென்று, ஆய்வு நடத்தி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனும் ஆலோசனை நடத்தியுள்ளது. இந்நிலையில், திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்க உள்ளது. இந்த 3 மாநிலங்களுக்கும் ஒரே கட்டத்தில் தேர்தல்கள் நடத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன