திரிபுரா சிட்பண்ட் நிறுவனம் மீது முதலீட்டாளர்கள் காவல்நிலையத்தில் புகார்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் முதலீட்டாளர்களிடம் பெற்ற தொகையை மோசடி செய்ததாக கூறி திரிபுரா சிட்பண்ட் நிறுவனம் மீது முதலீட்டாளர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

சென்னையை தலைமை இடமாகக் கொண்ட திரிபுரா சிட்பண்ட் நிறுவனத்தின் கிளை காரைக்குடியில் செயல்பட்டு வந்தது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள், பல்வேறு திட்டங்களின் கீழ் சீட்டு சேர்ந்து மாதமாதம் பணம் கட்டி வந்தனர். சீட்டு முடிந்து பல மாதங்களாகியும் திரிபுரா சிட்பண்ட் நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு முதிர்வு தொகையை திருப்பித் தராமல் இழுதடித்துள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் காரைக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதேபோல் திரிபுரா நிறுவனத்தின் மீது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன